ETV Bharat / sitara

சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி! - தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி!
சிரஞ்சீவிக்கு கரோனா தொற்று உறுதி!
author img

By

Published : Jan 26, 2022, 1:27 PM IST

இந்தியா முழுவதும் கரோனா மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது 3ஆவது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன், மம்முட்டி, செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், "அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் நேற்று (ஜன.25) இரவு எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கேக்' வெட்டி வெற்றிக் கொண்டாட்டம்; 'நாய் சேகர்' படக்குழு உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.