பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துவரும் படம் 'சாஹோ'. ஷ்ரத்தா கபூர் இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தை யூவி எண்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இந்தப் படத்தின் புரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஷங்கர்-இஷான்-லாய் தற்போது விலகியுள்ளனர். இது குறித்து இவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் சமயத்தில் இசையமைப்பாளர்கள் விலகியிருப்பது படத்துக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர்கள் விலகியதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை. தற்போது படக்குழு புதிய இசையமைப்பாளரை தீவிரமாக தேடிவருகின்றனர். இது குறித்து நல்ல தகவல் படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.