ETV Bharat / sitara

சரத்குமார் செல்போன் எண்ணை நகல் எடுத்து பேசிய பொறியாளர் மீது புகார்! - சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் சரத்குமார் புகார்

பலமுறை தொடர்புகொண்டபோது செல்போனை எடுக்காத காரணத்தால், சரத்குமாரின் நம்பரை செயலி ஒன்றின் உதவியோடு நகல் எடுத்து, அவருக்கே அழைப்பு விடுத்து பேசியுள்ளார் கோவையைச் சேர்ந்து பொறியாளார் அசோக்குமார்.

Actor sarathkumar
நடிகர் சரத்குமார்
author img

By

Published : Jul 30, 2020, 8:45 AM IST

சென்னை: நடிகர் சரத்குமாரின் செல்போன் எண்ணை செயலி மூலம் நகல், எடுத்து அவருக்கே தொடர்பு கொண்டு பேசிய நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் செல்போனிற்கு அவரது எண்ணிலிருந்தே அழைப்பு வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், செல்போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது அதில் பேசிய நபர், தான் கோவையைச் சேர்ந்த அசோக்குமார் என்றும், பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பலமுறை தனது எண்ணில் தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்காததால், செயலி மூலம் உங்களது எண்ணை நகலாக மாற்றி எடுத்து தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் சரத்குமார் புகார் அளித்தார்.

சரத்குமார் செல்போன் எண்னை நகர் எடுத்து பேசிய நபர்

இதேபோல் அந்த நபர் பல முக்கிய பிரபலங்களின் நகல் எண் மூலம் தன்னை தொடர்பு கொண்டுள்ளதாகவும், தனது எண்ணை வைத்து பல்வேறு நபர்களிடம் பேசியுள்ளதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் சரத்குமார். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி: கோலி, தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.