காமெடி நடிகர் சதீஷ் 'தமிழ் படம்' மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். இவர், கத்தி, ரெமோ. ஆம்பள, தமிழ்படம் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல் கிரேஸி மோகனுடன் எட்டு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் நீண்ட நாட்களாக மணப்பெண் தேடியும் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்துவந்தார்.
இதனால், தனக்கு யாரும் பெண் தரவில்லை என்று கூட படத்தின் மூலம் காமெடியாக தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டதும் உண்டு. மேலும் அவரது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனும் இவரை கலாய்த்து பேசியுள்ளார். இந்நிலையில், நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மோதிரம் மாற்றிக்கொள்ளும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சதீஷுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துவருகின்றனர். மேலும், திருமணம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.