திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில், தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் ஆக்ஸிஜனின் அவசியத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயற்கை ஆக்ஸிஜனின் தேவை அவசியம். இயற்கையின் ஆட்சியினை அதிகரிக்க வன விஸ்தரிப்பு முக்கியம் என்பதால் அதற்காக ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஒரு மரக்கன்றை தனது வாழ்நாளில் நட வேண்டும்.
தற்போதைய சூழலில் மாணவர்களின் திறனை அறிந்து கொள்ள தேர்வு நடத்துவதை விட அவர்களின் உடல் ஆரோக்கியத்தை அறிந்து கொள்வதற்கான கல்வியே அவசியம்” என கூறினார்.