தமிழ் சினிமாவில் தனிப்பெரும் இடத்தை பிடித்து தான் நடிக்காவிட்டாலும்கூட மீம்ஸ்களாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு. கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். நடுவில் 'சிவலிங்கா', 'மெர்சல்' போன்ற திரைப்படங்களில் வடிவேலு தோன்றியிருந்தாலும் அவ்வளவாக அவரது வழக்கமான காமெடி ட்ராக்குகள் படத்தில் மிஸ்ஸிங் என ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்தனர்.
இம்சை அரசன் திரைப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாகவே வடிவேலுவால் நடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் வெப் சீரிஸில் வடிவேலு புது அவதாரம் எடுக்கப்போகிறார் என்று இணையதளவாசிகளால் பேசப்பட்டுவந்தது.
ஆனால் அப்படி பரவிக்கொண்டிருக்கும் செய்தி தவறானது என்றும் சில நேர்காணல்களில் வெப் சீரிஸ்களில் வடிவேலு நடிப்பாரா என்ற கேள்விக்கு அவர் தயாராக இருக்கிறேன் என்று சொன்னது திரித்து கூறப்பட்டு அவர் வெப் சீரிஸில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது எனவும் வடிவேலுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... எலி தயாரிப்பாளருக்கு பூனையாய் மாறிப்போன வடிவேலு!