ETV Bharat / sitara

நலமுடன் இருக்கிறார்... ராமராஜன் உடல்நிலை குறித்து விளக்கம் - ராமராஜன் படங்கள்

ராமராஜன் பூரண நலத்துடன் இருப்பதால், அவரது உடல்நிலைக் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் எனக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ராமராஜன்
ராமராஜன்
author img

By

Published : Oct 18, 2021, 3:31 PM IST

1980-களில் முன்னணி நடிகராக வலம்வந்தவர், ராமராஜன். இவர் நீண்ட காலமாகப் படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருந்துவருகிறார். அதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனால் தான் படத்தில் நடிப்பதில்லை என கடந்த சில தினங்களாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவர் தரப்பினர் கூறுகையில், "ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம்.

இரண்டு படங்களுக்குத் தனது கதையைத் தந்துள்ள ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.

ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தொடக்க விழாவில் கலந்துகொள்வார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிஸி மோட்... மும்பை பறந்த சிம்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.