ETV Bharat / sitara

'வலியே... உயிர் வலியே... நீ உலவுகிறாய் இன்னும்...' தமிழ் சினிமாவில் ஜீவா - அஜித்

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளரகவும், இயக்குநராகவும் வலம் வந்த ஜீவா 2007ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். யாருமே எதிர்பாராத இவரது மறைவு திரையுலகினருக்கு மட்டுமன்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தியன் தாத்தா, வாலி படத்தில் சிவா, ஜென்டில்மேன் படத்தில் கிச்சா என இவர் படம்பிடித்து திரையில் காட்டிய பல கதாபாத்திரங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்ததை மறுக்க முடியாது.

ஜீவா
author img

By

Published : Jun 26, 2019, 2:30 PM IST

Updated : Jun 27, 2019, 3:38 PM IST

புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்த ஜீவா, பின் அதையே தனது வாழ்க்கையாக மற்றிக்கொண்டு சினிமாத் துறையில் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொடக்கத்தில் மலையாள திரைப்படங்களில் இயக்குநர் பிரியதர்ஷன் படங்களில் பணியாற்றினார். இதன்பின்னர் தமிழில் 'அக்னி நட்சத்திரம்', 'தேவர் மகன்', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியற்றி இருந்தார்.

பா. விஜய்
ஜென்டில்மேன்

இந்த நிலையில், 1993ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக உருவெடுத்த ஷங்கர் அறிமுகமான 'ஜென்டில்மேன்' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் ஜீவா. அப்போது நடிகர் அர்ஜூனை கொள்ளைக்காரனாகவும், இறுதியில் ஜென்டில்மேனாக மாற்றியதில் ஜீவாவின் கேமரா பெரும்பங்கு வகித்தது. இந்தப் படம் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் - ஜீவா காம்போவில் 'காதலன்', 'இந்தியன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஜீவா
காதலன்

'இந்தியன்' படத்தில் அப்பா - மகன், சுதந்திர போராட்ட தியாகி, இந்தியன் தாத்தா என கமல் காட்டியிருக்கும் வேரியேஷனை திரையில் பிரதிபலித்தது ஜீவாவின் ஒளிவண்ணம்.

ஜீவா
இந்தியன்

கமலுக்கு இப்படியென்றால் அஜித்தை வைத்து துறுதுறுப்பான இளைஞராக 'ஆசை' படத்திலும், காதல் மற்றும் வில்லத்தனம் கொண்ட இரு மாறுபட்ட அஜித்தை 'வாலி' படத்திலும் காட்டியிருப்பார்.

ஜீவா
ஆசை
ஜீவா
குஷி

இதேபோல் 'குஷி', 'சச்சின்' என இரு வேறு மாறுபட்ட கதை களங்களில் விஜய்யை இளமை துடிப்புடன் புதுமையாக காண்பித்து, அவரது ரசிகர்களின் வட்டத்தை பெருக்கினார். ஒளிப்பதிவில் பல்வேறு விதமான வெரைட்டி காட்டிய ஜீவா, இயக்குநராக '12B' என்று படம் அவதாரம் எடுத்தார்.

சென்னையின் பிரபலமான பேருந்து வழித்தடத்தின் பெயரில் தலைப்பா? என்று அப்போது பலரும் யோசித்த தருணத்தில், இப்படத்தில் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த 'சிம்ரன்', 'ஜோதிகா'வை நடிக்க வைத்ததுடன், நடிகர் ஷாம்-ஐ ஹீரோவாக அறிமுகப்படுத்தி படத்தையும் புதுமையான கதை மூலம் பேச வைத்தார்

ஜீவா
12B

கல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுக்குள் நிகழும் பாசம், சண்டை, ஈகோ, காதல் போன்ற நிகழ்வுகளை கல்லூரி செல்லும் ஒவ்வொருவரும் தனக்குள் பொருத்தி கொள்ளும் விதமான கதையம்சத்துடன் 'உள்ளம் கேட்குமே' என தனது அடுத்த படத்தை உருவாக்கியிருந்தார். அந்தக் கதையில் வரும் இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் தனக்கும் பொருந்தக்கூடியவை என 90களில் பிறந்தவர்கள் கொண்டாடினார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படம் அப்போதைய '96'.

காதல் என்பது ஒரு முறைதான் பூக்க வேண்டுமா? ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும். அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதை உதாரணப்படுத்தும் விதமாக வெளிவந்தது ஜீவாவின் மூன்றாவது படமான 'உன்னாலே உன்னாலே'. முக்கோண காதல் கதையாக செல்லும் இந்தப் படத்தின் இறுதியில் காதலனை பிரிந்த வலியை சதா வெளிப்படுத்தும் காட்சி ஒவ்வொரு காதலர்களாலும் கொண்டாடப்பட்டது.

ஜீவா
உன்னாலே உன்னாலே

அதுமட்டுமில்லாது நடிகர் 'ஷாம்', 'ஆர்யா', 'வினய்', 'அசின்' உள்ளிட்டோர்களை தமிழ் சினிமாவில் புதுமுகமாய் அறிமுகபடுத்தியவர். ஜீவாவின் ஒளிப்பதிவில் ஒரு ரிச்னஸ் (Richness) இருக்கும் கூடவே ரம்யமும் கலந்திருக்கும். இவரது படங்களின் படத்தை ஃபிரேம் பை ஃபிரேமாக ரசித்தவர்களுக்கு இது புரியும்.

ஜீவா
சச்சின்

ஹாரிஸ் ஜெயராஜை ஆஸ்தான இசையமைப்பாளராக தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர், பல சிறந்த பாடல்களை கொடுத்ததுடன் அதன் காட்சியமைப்பிலும் அழகியலை கூட்டியிருப்பார். ஜீவாவின் மனைவி அனீஷா, அவரது படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

ஜீவாவின் நினைவுகள் பற்றி பாடலாசியர் பா. விஜய்,

ஜென்டில்மேன்
பா. விஜய்

இயக்குநர் ஜீவா சிறந்த ஒளிப்பதிவாளர்; ஏராளமான திரைப்படங்கள் அவருடைய கை வண்ணத்தில் ஒளிப்பதிவு செய்து, மிக அழகிய தமிழ் சினிமாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். ஒளி ஓவியத்தை அவருடைய கண்கள் தூரிகையாய் மாறி வரைந்ததைக் கண்டு திரையுலகில் பல பிரம்மாக்கள் பிரமித்ததுண்டு.

அப்படிப்பட்ட ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்கள் ஒருகாலகட்டத்தில் இயக்குநராக வடிவம் எடுத்தார். ஒரு நவீனத்துவமான மெல்லிய காதல் இழையோடும் முழுக்க முழுக்க இசையை பிரதிபலிக்கும் திரைப்படத்தை எடுப்பதுதான் அவருடைய பாணி.

தொடர்ச்சியாய், அவருடைய படங்களிலே பாடல் எழுதி வந்த எனக்கு, அவரோடான முதல் பட வாய்ப்பு உள்ளம் கேட்குமே என்கிற திரைப்படம் மூலம் கிடைத்தது. அத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதிய நான், அதன்பிறகு தொடர்ந்து அவருடைய படங்களில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக ”ஜூன் போனால் ஜூலைக் காற்றே” பாடல் நட்புக்கும், காதலுக்கும் இடையில் நின்று தவிக்கின்ற ஒரு இளைஞன், ஏகாந்தமான வாழ்க்கையைப் பற்றியும் அதில் கட்டப்பட்டிருக்கின்ற கட்டுக்களை அவிழ்ப்பதற்கான எண்ணங்களையும், சிறகடிக்கத் துடிக்கும் தன் சிந்தனைகளையும் ஒன்றுகூட்டி பறவைகளின் கண்கள் வழியாய் பறந்த உலகத்தைப் பார்த்து பாடுவதுபோல் ஒரு பாடலாகும் என்று பிரமித்து கூறியுள்ளார்.

கவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலை ரசிகர்களின் கண் முன் கவியழகாகத் தரும் ஒளி ஓவியர்களில் தனக்கென தனி பாணியில் ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.

திரைப்படங்களில் பாடல் வரிகள் புரிவதில்லை என்கின்ற குற்றச்சாட்டை, தனது காட்சியமைப்புகளின் மூலம் தகர்கெறிந்தவர் ஜீவா.

ஜீவா
தாம் தூம்

இவர் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'தாம்தூம்' படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மறைந்த பிறகு அந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞர்களால் அவர் இல்லாமல் அத்திரைப்படத்தில் பணிபுரிய மனம் வரவில்லை. பின் அவரது மனைவி மேற்பார்வையில் படம் முடிக்கப்பட்டு 'தாம்தூம்' திரைப்படம் வெளிவந்தது.

உண்மையை சொல்லப்போனால் இயக்குநர் ஜீவாவின் இழப்பில் அழகான தமிழ் சினிமாக்களை நாம் இழந்துவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒளிப்பதிவாளர், இயக்குநர்கள் லிஸ்டில் முன்னே இருக்கிறார் ஜீவா.

Intro:Body:Conclusion:
Last Updated : Jun 27, 2019, 3:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.