ETV Bharat / sitara

மார்வெலுடன் கைகோர்க்கும் பேட்மேன்! - ஹாலிவுட் செய்திகள்

பேட்மேன் புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேலை தோர் : லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க மார்வெல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Christian Bale
Christian Bale
author img

By

Published : Jan 8, 2020, 11:30 PM IST

கிறிஸ்டோஃபர் நோலனின் பேட்மேன் ட்ரையலாஜியில் பேட்மேனாக வலம் வந்து உலகம் முழுவதும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேலை, தோர் சீரிஸின் நான்காவது திரைப்படமாக வெளிவரவுள்ள தோர்: லவ் அண்ட் தண்டரில் நடிக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Christian Bale
Christian Bale

மார்வெலின் இந்த முயற்சி வெற்றியடைந்தால், 2012இல் வெளியான பேட் மேன் சீரிஸின் இறுதி பாகமான டார்க் நைட் ரைசஸ் திரைப்படத்திற்குப் பிறகு கிறிஸ்டியன் பேல் இணையும் அடுத்த மிகப்பெரும் சூப்பர் ஹீரோ திரைப்படமாக இப்படம் அமையும். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 5 2021இல் படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தோர் சீரிஸின் முதல் பாகம் தொடங்கி, தோராக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் ஹேம்ஸ்வொர்த் தவிர்த்து, நடிகை டெஸ்ஸா தாம்ப்ஸன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் 2013 இல் வெளிவந்த தோர்: த டார்க் வேர்ல்ட் படத்திற்குப் பிறகு, நடாலி போர்ட்மேன் மீண்டும் இந்தத் திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்டியன் பேலும் இணைய வாய்ப்புள்ளதாக வெளிவந்துள்ள இந்தத் தகவல் மார்வெல், டிசி என இருதரப்பு சூப்பர் ஹீரோ உலக ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பயத்தில் உறைய வைக்க மீண்டும் வருகிறது 'ஈவில் டெட்'

Intro:Body:

Christian Bale in talks to join Thor: Love and Thunder

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.