நடிகர் கிறிஸ் எவான்ஸ் 2011ஆம் ஆண்டு வெளியான 'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்' படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். பின் இவர் கடந்த ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தோடு மார்வல் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கிறிஸ் எவான்ஸ் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களுடன் நடத்திய நேரலையின்போது அவரது செல்போன் கேலரியில் ஆபாச புகைப்படம் ஒன்று இருந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக வலைதள பக்கத்தில் அதிகமாக பரப்பி, ட்ரெண்டாக்கிக் கொண்டிருந்தனர்.
கிறிஸ் எவான்ஸ், சிறிது நேரத்திலேயே அந்தக் காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கினார். ஆனால் இது குறித்த கருத்து பதிவுகள் சமூக வலைதளத்தில் வலம்வர ஆரம்பித்தன. அவரை ஆதரித்தும் கேலி செய்தும் பலர் கருத்து பதிவிட்டனர்.
இதற்கிடையில், 'ஹல்க்' கதாபாத்திரத்தில் நடித்த மார்க் ருஃப்பலோ, கிறிஸ் எவான்ஸுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இது குறித்து மார்க் ருஃப்பலோ தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பா...! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்தச் சங்கடமும் இன்றி தனது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போது நீங்கள் சங்கடப்படுவதற்கு இதில் எதுவும் இல்லை" எனப் பதிவிட்டார்.
ட்ரம்பை கலாய்த்து 'கேப்டன் அமெரிக்கா'வுக்கு ஆதரவு தெரிவித்த 'ஹல்க்' - மார்க் ருஃப்பலோ படங்கள்
சமூக வலைதளத்தில் வெளியான ஆபாச புகைப்பட சர்ச்சைக்கு நடிகர் மார்க் ருஃப்பலோ, கிறிஸ் எவான்ஸுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.