இயக்குநர் மாருதி இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘பிரதி ரோஜு பண்டகே’. இதில் சாய் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்தப் படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சத்யராஜ் குடையை வீசிவிட்டு மழையில் நனையும் ஆசையுடன் குதிப்பது போலவும், சாய் தரம் தேஜ் குடையை பிடித்தபடி அவர் பின்னால் செல்வது போலவும் இந்த மோசன் போஸ்டர் இருக்கிறது. மழைச்சாரல் வீசும் மெல்லிய பின்னணி இசையை தமன் தந்திருக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த மோசன் போஸ்டரை வெளியிட்ட சிரஞ்சீவி, மழையில் நனைய உனக்கு வயது வரம்பு இல்லை. லாலிபாப் சாப்பிட உனக்கு வயது வரம்பு இல்லை. வாழ்க்கையை கொண்டாட உனக்கு வயது வரம்பு இல்லை. ’பிரதி ரோஜு பண்டகே’ வாழ்க்கையின் ஆன்மாவை கொண்டாடும் திரைப்படம்’ எனத் தெரிவித்தார். அல்லு அரவிந்த் வழங்கும் இத்திரைப்படத்தை ஜிஏ2 பிக்சர்ஸ் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன.