பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 3ஆவது சீசனில் போட்டியாளர்களாக இயக்குநர் சேரன், நடிகைகள் ஷெரின், ஷாக்ஷி, வனிதா, நடன ஆசிரியர் சாண்டி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கினார். 100 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முகின், சாண்டி, லாஸ்லியா, தர்ஷன், சேரன், ஷெரின் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில் டைட்டில் வின்னராக முகின் வெற்றிவாகை சூடினார்.
![Cheran diwali wish](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4887775_cheran2.jpg)
இந்த நிகழ்ச்சி கடந்த 6ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இதில் பங்கேற்றிருந்த பிரபலங்கள் வெளியே வந்து ஒருவரையொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனிடையே, இயக்குநர் சேரன் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு பின் தனது மகள், நடிகைகள் ஷெரின்-ஷாக்ஷி மற்றும் பெற்றோருடன் பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றுகூடி தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
![Cheran diwali wish](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4887775_cheran.jpg)
இந்த புகைப்படத்தை நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த குழுவினருக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.