சென்னை: 19ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் 53 நாடுகளிலிருந்து 121 படங்கள் திரையிடப்பட்டன. தமிழில் கர்ணன், சிவரஞ்சனியும் சில பெண்களும், சேத்துமன், கட்டில், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
இந்நிலையில் பன்னாட்டு திரைப்பட விழா நேற்றுடன் (ஜனவரி 7) நிறைவடைந்தது. முடிவில் சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் சிறந்த படமாகத் தேர்வானது. இதன் தயாரிப்பாளரும், இயக்குநருமான வசந்த்துக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் இரண்டாவதாக சேத்துமன், தேன் ஆகிய படங்கள் தேர்வாகின. சிறப்பு ஜூரி விருது நடிகை லட்சுமிக்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும், அமிதாப்பச்சனுக்கும் வழங்கப்பட்டது. யூத் ஐகான் விருது பாடகர் சித் ஶ்ரீராமுக்கு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் ரன்பீர்-ஆலியா ஜோடி!