ETV Bharat / sitara

நடிகர் கிருஷ்ணா மீது மோசடி புகார் கொடுத்த முன்னாள் மேலாளர்! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

நடிகர் கிருஷ்ணா தன்னிடம் பணத்தைப் பெற்றுவிட்டு ஏமாற்றிவருவதாக அவரின் முன்னாள் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
author img

By

Published : Dec 11, 2020, 7:15 AM IST

தமிழ் சினிமாவில் ‘கழுகு’, ’யாமிருக்க பயமே’ உள்ளிட்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கிருஷ்ணா. இவரிடம் திலீப்குமார் என்பவர் பல ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில் மேலாளர் திலீப்குமார் அசோக்நகர் காவல் நிலையத்தில் நேற்று (டிச. 10) கிருஷ்ணா மீது புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், ”நடிகர் கிருஷ்ணாவிடம் நான் மேலாளராகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தேன். அப்போது தொழில் தொடர்பாக என்னிடம் 2016ஆம் ஆண்டு மூன்று தவணையாக 10.43 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றார்.

அதைத் திருப்பித் தருமாறு பலமுறை கிருஷ்ணாவிடம் கேட்டும், இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றிவருகிறார். ஆதலால் உடனே எனது பணத்தை அவரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கிருஷ்ணாவை நேரில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பினர். அதற்கு நடிகர் கிருஷ்ணா தான் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி வந்துள்ளதாகவும், விசாரணைக்கு முன்னிலையாக 15 நாள்கள் அவகாசம் தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'வலிமை' அப்டேட் எப்போது? அஜித்குமார் மேனேஜர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.