ETV Bharat / sitara

'படத்தை வெளியிடலாம்' - தணிக்கைக் குழு அறிவுரை, 'சைலன்ஸ்' இயக்குநர் மகிழ்ச்சி!

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'சைலன்ஸ்' திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடலாம் எனத் தணிக்கைக் குழுவினர் கூறியுள்ளனர்.

silence
silence
author img

By

Published : May 27, 2020, 2:08 PM IST

Updated : May 28, 2020, 9:11 AM IST

நடிகை அனுஷ்கா 'பாகமதி' திரைப்படத்திற்குப் பின் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ (சைலன்ஸ்) என்னும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த படம் கரோனா அச்சம் காரணமாக வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்திற்கு 'யு/ஏ (U/A)' சான்றிதழைத் தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர். இதனைப் படத்தின் இயக்குநர் ஹேமந்த் மதுகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் பாராட்டியதோடு மட்டுமல்லாது முதலில் திரையரங்கில் வெளியிடுங்கள் என்று அறிவுரை கூறியதாகவும் பதிவிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: OTT-யில் வெளியாகுமா அனுஷ்காவின் நிசப்தம்? - தயாரிப்பாளரின் விளக்கம்

Last Updated : May 28, 2020, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.