ETV Bharat / sitara

2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் - திருமணமான பிரபலங்கள் 2021

2021 ஆம் ஆண்டு திருமணம் மூலம் இணைந்த திரையுலக பிரபலங்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

பிரபலங்கள்
பிரபலங்கள்
author img

By

Published : Dec 30, 2021, 8:12 AM IST

கயல் ஆனந்தி

கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆனந்தி. அன்றிலிருந்து இவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றே அழைக்கின்றனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இவர் ஜனவரி 7ஆம் தேதி சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

கயல் ஆனந்தி - சாக்ரடீஸ்
கயல் ஆனந்தி - சாக்ரடீஸ்

வருண் தவான் - நடாஷா தலால்

வருண் தவான் - நடாஷா தலால்
வருண் தவான் - நடாஷா தலால்

பாலிவுட் நடிகர் வருண் தவான் பள்ளியில் படித்ததிலிருந்தே நடாஷா தலாலை காதலித்து வந்தார். அலிபாக்கில் இவர்களின் திருமணம் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டர்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி

இயக்குநர் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி
இயக்குநர் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தேசிங் பெரியசாமி. இவர் அதேபடத்தில் நடித்த நடிகையும், இயக்குநருமான அகத்தியனின் மகள் நிரஞ்சனியைப் பிப்ரவரி 25 ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் -  ஜுவாலா கட்டா
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

விஷ்ணு விஷால் 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே ரஜினி என்பவருடன் திருமணமாகி, ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரை விவாகரத்து செய்த பின் ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பிரணிதா

பிரணிதா - நிதின் ராஜு
பிரணிதா - நிதின் ராஜு

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துவருபவர் பிரணிதா சுபாஷ். பெங்களூரை சேர்ந்த இவர் தொழில் அதிபர் நிதின் ராஜுவை, மே 30 ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆதித்யா - யாமி கெளதம்

ஆதித்யா - யாமி கெளதம்
ஆதித்யா - யாமி கெளதம்

யூரி படத்தின் இயக்குநர் ஆதித்யா தாரை, யாமி கவுதம் இந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் திருமணம் செய்து கொண்டார். யாமி கெளதமின் பண்ணை வீட்டில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

கவிஞர் சினேகன்

சினேகன் - கன்னிகா
சினேகன் - கன்னிகா

கவிஞர் சினேகன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகை கன்னிகாவை, கமல் ஹாசன் தலைமையில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திரையுலக பிரபலங்கள், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் பாலா

பாலா- எலிசபெத்
பாலா- எலிசபெத்

நடிகரும், சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா, மருத்துவர் எலிசபெத் உதயனை செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். முன்னதாக பாடகி அம்ருதா சுரேஷை, பாலா 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யுலேகா ராமன்

வித்யுலேகா ராமன் - சஞ்சய்
வித்யுலேகா ராமன் - சஞ்சய்

'நீ தானே என் பொன்வசந்தம்' படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத் துறையில் அறிமுகமானவர் வித்யுலேகா. வித்யுலேகாவுக்கும், தொழிலதிபர் சஞ்சய்க்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது. டேட்டிங் செயலி மூலம் பழகி காதலித்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

லிஜோமோல் ஜோஸ்

லிஜோமோல் ஜோஸ் - அருண் ஆண்டனி
லிஜோமோல் ஜோஸ் - அருண் ஆண்டனி

நடிகர் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான படம் ஜெய்பீம். இதில் செங்கேணி பாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் லிஜோமோல் ஜோஸ். இவர் அருண் ஆண்டனியை அக்டோபர் 5 ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்.

ஷபானா - ஆர்யன்

ஷபானா - ஆர்யன்
ஷபானா - ஆர்யன்

செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இவரும் சின்னத்திரை நடிகர் ஆர்யானும் நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஷபானா ஆர்யாவின் முறைப்படி திருமணம் செய்தார்.

ராஜ்குமார் ராவ்

ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா
ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா

ராஜ்குமார் ராவ் - பத்ரலேகா ஜோடி நவம்பர் 15 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 11 ஆண்டுகளாகக் காதலித்துவந்த இந்த ஜோடியின் திருமண நிகழ்வில் கரோனா பரவல் காரணமாக குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ரேஷ்மா முரளிதரன்- மதன்

ரேஷ்மா முரளிதரன்- மதன்
ரேஷ்மா முரளிதரன்- மதன்

பிரபல தொலைக்காட்சியில் வெளியான தொடரில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் - மதன் பாண்டியன். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில் நவம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்தனர்.

வலிமை வில்லன் கார்த்திகேயா

கார்த்திகேயா -லோஹிதா
கார்த்திகேயா -லோஹிதா

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வலிமை. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. இவர் தனது காதலி லோஹிதா ரெட்டியை நவம்பர் 21 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்தார். பிரமாண்டமாக நடந்த இவர்களின் திருமணம் விழாவில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சித்து - ஸ்ரேயா

சித்து - ஸ்ரேயா
சித்து - ஸ்ரேயா

திருமணம் புகழ் சித்துசித் - ஸ்ரேயா அஞ்சன் இருவரும் நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்

பிரபல பாலிவுட் ஜோடிகளான கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் ஜோடி 2019 ஆம் ஆண்டு முதல் காதலிப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இந்த ஜோடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். டிசம்பர் 9 ஆம் தேதி நடந்த இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கார்த்திக் - அம்ருதா

கார்த்திக் - அம்ருதா
கார்த்திக் - அம்ருதா

திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் தன்னை விட 15 வயது முதல் 17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்தவகையில் நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார், அம்ருதா சீனிவாசனை டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் இடையே 16 வயது வித்தியாசம் உள்ளன. ஏற்கனவே கார்த்திக்கிற்கும், பாடகி சுசித்ராவுடன் திருமணமான நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தானது.

இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.