இயக்குநர் சக்ரி டோலிட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம். நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து தரம் தாழ்ந்த கருத்தை தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், நயன்தாராவின் ரசிகர்களும் ட்விட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மேலும் சில நட்சத்திரங்கள் ராதாரவிக்கு எதிரான தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
ராதரவியின் கருத்துக்கு குறித்து நடிகர் விஷால் கூறியதாவது, குறிப்பிட்ட ஒரு பெண்ணை பற்றி நீங்கள் பேசிய முட்டாள்தனமான பேச்சுக்கு எதிராக உங்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் அனுப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டது, ஒரு நடிகர் சங்க பொதுச்செயலாளராக மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.
ராதாரவியின் பேச்சுக்கு இயக்குநர் சீனுராமசாமி, மூத்த நடிகராக வளர்ந்து வரும் நடிகைக்கு அறிவுரை வழங்காமல், அருவருப்பான கருத்துக்களை கூறுவது அழகல்ல என பதிவிட்டிருந்தார்.
இயக்குநரும், நடிகையுமான லக்ஷமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, ராதாரவியின் சர்ச்சை பேச்சு புதிதல்ல. சினிமாவில் பெண்களுக்கு எதிராக இருந்து வரும் மனநிலை மாற வேண்டும் என அவர் கூறினார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ராதாரவியின் பேச்சை நகைச்சுவையாக விட்டுவிட வேண்டாம். அவர் ஒரு விஷம் என பதிவிட்டிருந்தார்.