ETV Bharat / sitara

ரூ.15 கோடி மோசடி; தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு - மலேசிய நிறுவனத்தை ஏமாற்றிய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி

வெளிநாட்டு பதிப்புரிமை வாங்கித் தருவதாக மலேசிய நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி செய்தது தொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.15 கோடி மோசடி?; தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Jan 21, 2022, 6:27 PM IST

சென்னை: மலேசியாவில் இயங்கி வரும் தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) எனும் நிறுவனம் தமிழ் திரைப்படங்களுக்கு முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிட்டு வருகின்றது. இதன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக்.

’கபாலி’ உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம்தான் வெளிநாடுகளில் வெளியிட்டது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி அணுகியதாக கூறப்படுகிறது.

பட உரிமை இல்லாதது அம்பலம்

அப்போது ரஜினிகாந்த்தின் ‘பேட்ட’, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’, தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி நம்ப வைத்து, இந்நிறுவனத்திடமிருந்து ரூ. 30 கோடி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் ஒரு கட்டத்தில் முரளியிடம் ’பேட்ட’ படத்தின் பதிப்புரிமை இல்லை எனத் தெரிய வரவே, இது குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கேள்வியெழுப்பியுள்ளது. அப்போது வாங்கிய பணத்தில் ரூ. 15 கோடியை மட்டும் திருப்பிக் கொடுத்து சமாளித்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் ‘காஞ்சனா-3’, ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் முரளியிடம் இல்லை என்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிய வந்துள்ளது.

முரளி மீது வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து வாங்கிய பணத்தை திருப்பித்தர மறுத்த முரளி, அலட்சியமாகவும் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது என மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது சென்னை காவல் துறையில் மலேசிய நிறுவனம் புகாரளித்திருக்கிறது. புகாரின் பேரில் முரளி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது தமிழ் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ’மன்மத லீலை’ படத் தலைப்பு சர்ச்சை; தயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.