ETV Bharat / sitara

பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான வழக்கு ரத்து - பீப் பாடல் பாடிய சிம்பு

பெண்கள் குறித்து ஆபாசமாக பீப் பாடல் பாடியதாக, சிம்புவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளுள் ஒன்றை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான வழக்கு ரத்து

author img

By

Published : Feb 16, 2022, 6:44 PM IST

சென்னை: 2015ஆம் ஆண்டில் சிம்பு பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பாடியதாகக் கூறி, இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. இதனையடுத்து பாடல் பாடிய சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராகப் பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக சிம்பு, அனிருத்துக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று (பிப்ரவரி 16) விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது.

விசாரணையில் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால், கோவை ரேஸ் கோர்ஸில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பதிவுசெய்த வழக்கு தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: இறுதிகட்ட பணியில் கருணாஸின் 'ஆதார்'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.