ETV Bharat / sitara

எளிதான வாழ்க்கையை வேண்டி பிரார்த்தனை செய்யாதீர்கள் - புரூஸ் லீ

புரூஸ் லீயின் 48ஆவது நினைவு தினம் இன்று (ஜூலை 20). அவரைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை இத்தொகுப்பில் காண்போம்.

Bruce lee death anniversary
Bruce lee death anniversary
author img

By

Published : Jul 20, 2021, 4:09 PM IST

தற்காப்புக் கலையும் தத்துவமும்:

1959ஆம் ஆண்டு முதல் புரூஸ் லீ அமெரிக்காவில் தற்காப்பு கலை வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். தான் கற்ற கலையில் வெவ்வேறு முயற்சிகள் செய்து புதிதான தற்காப்பு முறைகளை அறிமுகம் செய்தார். அதற்கு ஜுன்-ஃபன் குங்ஃபு என்று பெயரிட்டார். தற்காப்பு கலையில் இவ்வாறு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தன்னை அறிதல் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். தற்காப்பு கலையின் மூலமாக தன்னை வெளிக்கொண்டு வர நினைத்தார்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, டாவோயிஸம், புத்த மத கோட்பாடுகளின் மூலமாக உத்வேகம் அடைந்தார். தற்காப்பு கலையில் தத்துவத்தை புகுத்தி புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சண்டையிடும் நாயகனாக மட்டும் பலரால் அறியப்படும் புரூஸ் லீ ஒரு ஆகச் சிறந்த தத்துவ ஞானியும் கூட.

புரூஸ் லீ
புரூஸ் லீ

‘உங்கள் மனதை வெற்றிடமாக்குங்கள். நீர் போல வடிவமற்று, உருவமற்று இருங்கள்’ இது புரூஸ் லீ கூறிய உன்னதமான மேற்கோள்களில் ஒன்று. அவர் திரைத்துறையின் உள்ளே வந்து சாதித்தது ஏராளம். அவரை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில அரிய செய்திகளும் உண்டு.

புரூஸ் லீ சில சுவாரஸ்யங்கள்:

புரூஸ் லீக்கு பார்வைக் கோளாறு இருந்தது. இதனால் முதன்முதலாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தியவர் அவர்தான். பின்னாளில் அது தொந்தரவாக இருக்க, தனது புட்டிக் கண்ணாடிக்கு மாறிவிட்டார். புட்டிக் கண்ணாடியை அவர் தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது அவர் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தியது, அதை அணியும்போது தான் எங்கிருந்து வந்தேன் என்பதை உணர்வதாக தெரிவித்திருக்கிறார்.

முகமது அலி - புரூஸ் லீ
முகமது அலி - புரூஸ் லீ

புரூஸ் லீ, முகமது அலியோடு ஒரு நாளாவது சண்டை போட வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். முகமது அலியின் கால்கள் செயல்படும் வேகத்தை பார்த்து அவர் சில விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் காலத்தின் கோலத்தால் அந்த சண்டை நடைபெறாமல் போனது.

தன் குருவான இப் மேனிடம் தனி வகுப்புகள் கற்றுக் கொள்வதற்காக சக மாணவர்களை பொய் சொல்லி வகுப்புக்கு வராமல் செய்யும் பழக்கமும் அவரிடம் இருந்தது. தெருவில் திரியும் குண்டர்களுடன் சண்டையிடுவது இப் மேனுக்கு பிடிக்காது. ஆனால், புரூஸ் லீ அந்த வேலையை சிறப்பாக செய்வார்.

ஒருநாளில் 5,000 முறை ‘பன்ச்’ பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்தார். முறையான கராத்தே பயிற்சி பெறாத போதிலும் மிகத் துல்லியமாக கராத்தே அசைவுகளை செய்யக்கூடியவர். தான் காண்பதை பயிற்சி செய்து அதனை கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்.

புரூஸ் லீ - ஜாக்கி ஜான்
புரூஸ் லீ - ஜாக்கி ஜான்

புரூஸ் லீயின் சண்டைக் குழுவில் பணிபுரிந்தவர் ஜாக்கி சான். பலமுறை புரூஸ் லீயிடம் செமத்தியாக அடிவாங்கியிருக்கிறார்.

பல வீடியோ கேம் கதாபாத்திரங்களுக்கு புரூஸ் லீ தான் முன்னோடி. Mortal Kombat-இல் வரும் Liu Kang,Tekken-இல் வரும் Law மற்றும் Street Fighter II-இல் வரும் Fei Long போன்ற கதாபாத்திரங்கள் புரூஸ் லீயை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

சர்கிள் ஆஃப் அயன்
சர்கிள் ஆஃப் அயன்

1978ஆம் ஆண்டு வெளியான ‘Circle of Iron’ என்ற திரைப்படம், புரூஸ் லீயால் எழுதப்பட்ட ‘The Silent Flute’ என்ற கதையின் தழுவல்.

ஸ்டீவ் மெக்குயின், ஜேம்ஸ் கோபர்ன், ஜார்ஜ் லேசன்பை, கரீம் அப்துல் ஜாபர் மற்றும் ரோமன் போலன்ஸ்கி போன்ற பிரபலங்களுக்கு புரூஸ் லீ தனிப்பட்ட பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.

ஹாங்காங்கின் பிரபலமான குழந்தை நட்சத்திரம் புரூஸ் லீ, தனது 18ஆவது வயதிலேயே 20 படங்களில் நடித்திருந்தார். புரூஸ் லீக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். அவரது “The Tao of Jeet Kune Do“ புத்தகத்தில் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். புரூஸ் லீ ஒரு கூட்டத்துக்கு தலைவனாக இருந்தார். அதற்கு “The Tigers of Junction Street” என்று பெயர் வைத்திருந்தனர்.

புரூஸ் லீ நூலகம்
புரூஸ் லீ நூலகம்

புத்தகங்களை அதிகமாக நேசிக்கும் புரூஸ் லீ, தனது நூலகத்தில் 2,000 புத்தகங்களுக்கு மேல் வைத்திருந்தார். புரூஸ் லீக்கு ஓவியம் வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த ஓவியர் என்பது பலருக்கு தெரியாது.

புரூஸ் லீ வரைந்த ஓவியம்
புரூஸ் லீ வரைந்த ஓவியம்

எளிதான வாழ்க்கையை வேண்டி பிரார்த்தனை செய்யாதீர்கள். கடுமையான வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியை வேண்டி பிரார்த்தியுங்கள் என்கிறார் புரூஸ் லீ. அந்தத் தத்துவ ஞானியை இன்று நினைவுகூருவோம்.

இதையும் படிங்க: #Hbd_Christoper_Nolan: வில்லாதி வில்லன்களை தந்த திரையுலக மேதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.