அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியான படம் 'அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). திரிவிக்ரம் இயக்கியுள்ள இப்படத்தில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இடம்பெற்ற அனைத்தும் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிலும் குறிப்பாக, 'புட்ட பொம்மா புட்ட பொம்மா' (Butta bomma) என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் இப்பாடலை விரும்புகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அதிலும் குறிப்பாக டிக்டாக்கில் இப்பாட்டில் வரும் நடனத்தை ஆடி பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை டிக்டாக்கில் #bottabomma என்ற ஹாஷ் டக்கை 36 மில்லியன் பேரும், #buttobommasong என்ற ஹாஷ் டக்கை 1.3 மில்லியன் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் 'மிஸ் இந்தியா' ரிலீஸ் தேதி அறிவிப்பு