ETV Bharat / sitara

இந்தியன்-2 படத்தில் கமலுக்கு வில்லனாகும் அனில் கபூர்? - பாலிவுட் நடிகர் அனில் கபூர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படத்தில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் இணைந்துள்ளார்.

indian-2
author img

By

Published : Oct 1, 2019, 2:12 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த இத்திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் ஏற்படும் விளைவு பற்றி இப்படத்தில் ஆழமான கருத்துப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் கமல்-ஷங்கர் கூட்டணியில் தற்போது உருவாகிவருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில் சித்தார்த், விவேக், ரகுல் பீரித், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எனினும் இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு இன்று வரை தெளிவாக வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், அக்ஷ்ய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது என்று தகவல் வெளியானது.

எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஸ்ரீபெரும்பதூரில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்தியன்-2 படம் குறித்து புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இயக்குநர் ஷங்கர் உடன் பாலிவுட் நடிகர் அனில் கபூர் பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் அவர் இந்தியன்-2 படத்தில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

indian-2
ஷங்கருடன் அனில் கபூர்

அவ்வாறு இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில அனில் கபூர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகக்கூடும். ஏற்கனவே இந்தியன்-2 படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும்பட்சத்தில் தற்போது புதிய வரவாக அனில் கபூர் இணையவுள்ளது கமல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக முதல்வன் படத்தின் பாலிவுட் ரீமேக்கான நாயக் படத்தில் அனில் கபூர் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

One of the most expected movies of Kollywood now is Kamal Haasan starrer Indian 2 directed by Shankar. This movie is the sequel to the 1996 superhit movie Indian, and is produced by Lyca Productions. The team has been shooting in different locations of Chennai.

While it was said earlier that Akshay Kumar and Ajay Devgn were approached to play the villain in Indian 2, the latest update is that Bollywood actor Anil Kapoor has joined the team and will play the villain. Anil Kapoor had earlier acted as the hero in Shankar's debut Hindi film Nayak, the remake of Mudhalvan.

Indian 2 also stars Kajal Aggarwal, Siddharth, Samuthirakani, Rakul Preet Singh, Vivek and Delhi Ganesh and has  music by Anirudh. Recently the team had shot some sequences in a prison in Andhra, and the movie is expected to release next year for Tamil New Year. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.