ETV Bharat / sitara

குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் பில் டியூக்! - master vijay

விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலை ஹாலிவுட் இயக்குநர் பில் டியூக் பாராட்டியுள்ளார்.

குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர் பில் டியூக்!

author img

By

Published : Feb 24, 2020, 7:40 AM IST

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இவர்களுடன் சாந்தனு, சஞ்சீவ், கௌரி கிஷன், ஆன்டிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள 'குட்டி ஸ்டோரி' பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது. அனிருத் இசைமைத்துள்ள இப்பாடலின் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். மிகவும் எளிமையாகவுள்ள இப்பாடலின் வரிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கின்றனர்.

இதற்கிடையில், இப்படல் குறித்து ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான பில் டியூக் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'சிறந்த மியூசிக் வீடியோ' என்று பதிவிட்டு, இயக்குநர் அருண் காமராஜ், அனிருத் ஆகியோரை டேக் செய்துள்ளார். இப்பதிவை கண்ட அருண்காமராஜ் நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டிய இயக்குநர் மிஷ்கின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.