'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளிக்கு பிகில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நேற்று விஜய் குரலில் வெளியான ’வெறித்தனம்’ என்ற பிகில் படப் பாடல் சமூக வலைதளங்களையும் இணையத்தையும் கலக்கி வருகிறது.
-
The Mass-filled #Verithanam goes two notches higher in 24 hours global charts! 💥🥁💥🥁💥
— Sony Music South (@SonyMusicSouth) September 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
KEEP 'EM COMING! 🔥🔥
➡️https://t.co/594L9TBrxB@actorvijay @Atlee_dir @arrahman@archanakalpathi @Ags_production @Lyricist_Vivek#VerithanamRecords #BigilDiwali pic.twitter.com/HUn45LPMcz
">The Mass-filled #Verithanam goes two notches higher in 24 hours global charts! 💥🥁💥🥁💥
— Sony Music South (@SonyMusicSouth) September 2, 2019
KEEP 'EM COMING! 🔥🔥
➡️https://t.co/594L9TBrxB@actorvijay @Atlee_dir @arrahman@archanakalpathi @Ags_production @Lyricist_Vivek#VerithanamRecords #BigilDiwali pic.twitter.com/HUn45LPMczThe Mass-filled #Verithanam goes two notches higher in 24 hours global charts! 💥🥁💥🥁💥
— Sony Music South (@SonyMusicSouth) September 2, 2019
KEEP 'EM COMING! 🔥🔥
➡️https://t.co/594L9TBrxB@actorvijay @Atlee_dir @arrahman@archanakalpathi @Ags_production @Lyricist_Vivek#VerithanamRecords #BigilDiwali pic.twitter.com/HUn45LPMcz
தற்போதுவரை இப்பாடலை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் அதிகம் லைக் செய்யப்பட்ட லிரிக்கல் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.
யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் வெறித்தனம் பாடல் 4ஆவது இடத்தில் இருப்பதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் லிரிக்கல் வீடியோ அதிக லைக்ஸ்களை பெற்ற லிரிக்கல் வீடியோவாக இருந்த நிலையில், தற்போது விஜய்யின் பிகில் 'வெறித்தனம்' அதை அடிச்சுத் தூக்கியுள்ளது.