#BigilFootballTournament: மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய வீரர்கள் புட் ஃபால் விளையாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ட்ரோல் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
விஜய் - இயக்குநர் அட்லி ஆகியோர், 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'பிகில்'. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், விவேக், யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
-
Congratulations winners and thanks for the 2 days of some super fun football!!
— AGS Entertainment (@Ags_production) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
#BigilFootballTournament in association with @ChennaiCityFC
Winning teams:
1- Wolf Pack
2- Lyceum FC
3-Premier Soccer@archanakalpathi @am_kathir pic.twitter.com/OKTUJDSADm
">Congratulations winners and thanks for the 2 days of some super fun football!!
— AGS Entertainment (@Ags_production) October 20, 2019
#BigilFootballTournament in association with @ChennaiCityFC
Winning teams:
1- Wolf Pack
2- Lyceum FC
3-Premier Soccer@archanakalpathi @am_kathir pic.twitter.com/OKTUJDSADmCongratulations winners and thanks for the 2 days of some super fun football!!
— AGS Entertainment (@Ags_production) October 20, 2019
#BigilFootballTournament in association with @ChennaiCityFC
Winning teams:
1- Wolf Pack
2- Lyceum FC
3-Premier Soccer@archanakalpathi @am_kathir pic.twitter.com/OKTUJDSADm
இந்தப் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் வெறித்தனம் என்னும் பாடலை விஜய் பாடியும் உள்ளார். அக்டோபர் 25ஆம் தேதி படம் வெளியாகிறது.
படத்தின் புரமோஷன் பணிகளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. அதில் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் - சென்னை சிட்டி எஃப்சி கால்பந்து கிளப் இணைந்து கால்பந்தாட்ட போட்டி தொடர் ஒன்றை நடத்தியுள்ளது.
-
. #LionelMessi’s reply.. 🤣🤣🤣🙊🙊🙊 pic.twitter.com/Qck69t14Ck
— Pramod Madhav (@madhavpramod1) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">. #LionelMessi’s reply.. 🤣🤣🤣🙊🙊🙊 pic.twitter.com/Qck69t14Ck
— Pramod Madhav (@madhavpramod1) October 20, 2019. #LionelMessi’s reply.. 🤣🤣🤣🙊🙊🙊 pic.twitter.com/Qck69t14Ck
— Pramod Madhav (@madhavpramod1) October 20, 2019
இப்போட்டியில் 64 அணிகள் நாக் அவுட் முறையில் விளையாடினர். இதில் இறுதியாக முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு இப்படத்தில் நடித்த கதிர் பரிசுகளை வழங்கினார்.
தற்போது இந்த போட்டியையும் ட்ரெய்லரையும் பார்த்த ரசிகர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் இருந்து விலக வேண்டும் என்றும் எங்கள் தளபதி வெறித்தனமாக புட் ஃபால் ஆடுகிறார்; ரொனால்டோவே தோற்று விடுவார் எங்கள் தளபதியிடம் என்ற ட்ரோல் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.