ETV Bharat / sitara

போட்றா வெடிய....லோக்கல் திரையரங்கு முதல் ஐமேக்ஸ் வரை 'பிகில்' ஆட்டம் வெறித்தனம்! - பிகில் தீபாவளி

ஐமேக்ஸில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பிகில்' திரைப்படம் படைத்துள்ளது.

bigil
author img

By

Published : Oct 24, 2019, 2:52 PM IST

Updated : Oct 24, 2019, 8:59 PM IST

விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நாளை வெளியாகும் இப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கான டிக்கெட் முடிவடைந்த நிலையில், வடபழனி பலாஸோவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் பிகில் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

வழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இந்த திரையரங்கம் கொடுக்கும் என்பதால் பிகில் படத்தை இதில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பிகில் படைத்துள்ளது.

Intro:Body:

Bigil first movie telecasted in Imax

Conclusion:
Last Updated : Oct 24, 2019, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.