பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 25 நாள்கள் நிறைவடைந்து, வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் நெருப்பு வாரம் என்பதால், இசைவாணி தனது நெருப்பு நாணயத்தை வைத்து, கிச்சன் ஏரியாவை ரூல் செய்துவருகிறார்.
பிக்பாஸ் இதுபோன்ற சக்தி கொடுத்தும், இசைவாணி அதனைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். கிச்சன் ஏரியாவின் முழு சக்தியையும் அவர் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியும் அவர் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மனதிலும் இருக்கிறது.
'ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க' என்று பாடலுடன் 25 நாள்கள் தொடங்கியது. தனக்கு கொடுத்த சக்தியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று இசைவாணி முடிவு செய்துவிட்டார் போல, காலை எழுந்தவுடன் நெருப்பு நாணயத்தை தான் கொடுத்த பிறகே சமைக்க வேண்டும் என்றார். 'யாரும் தன்னை மதிக்கவில்லை' என்ற ஆதங்கத்தில் இந்த முடிவுக்கு வந்தார் போல இசைவாணி.
கிராமம்/ நகரம் டாஸ்க் தோல்வியடைந்து விட்டதால், சுவாரஸ்யமாக டாஸ்க்கை விளையாடுங்கள் என்றார் பிக்பாஸ். சின்னதாக டாஸ்க் கொடுத்தால் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். அதேதான் நாங்களும் நினைக்கிறோம்.
நேற்றைய எபிசோட்டில் இரண்டு அணி தலைவர்களிடம், யார் சுவாரஸ்யம் இல்லாமல் கிராமம்/ நகரம் டாஸ்க் விளையாடினார்கள் எனப் பிக்பாஸ் கேட்டார். அதற்கு இரண்டு அணி தலைவர்களும், சற்றும் யோசிக்காமல் பாவனி, மதுமிதா பெயரை சொல்லிவிட்டனர். தாங்கள் என்ன சுவாரஸ்யம் குறைவாக விளையாடினோம் என பிக்பாஸ் வீட்டையே இருவரும் இன்று (அக்.29) இரண்டாக மாற்றிவிடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: BB DAY 24: நாணயம் ஆட்டைய போட்ட சுருதியை வேட்டையாடிய தாமரை