ETV Bharat / sitara

BB Day 51 : எதிர்பார்க்காத தலைவர்... முட்டிக்கொண்ட தாமரை, பிரியங்கா - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவராக முதல்முறையாக அபினய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரியங்கா
பிரியங்கா
author img

By

Published : Nov 23, 2021, 3:58 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி, 50 நாள்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது விறுவிறுப்பான டாஸ்க் மூலம் நிகழ்ச்சி மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. நேற்று (நவம்பர் 22) வாரத்தின் முதல் நாள் என்பதால், தலைவர் டாஸ்க், எலிமினேஷன் போன்ற சுவராஸ்யமான விஷயங்கள் எபிசோட்டில் இடம்பெற்றிருக்கும்.

என்ன நடந்தது 51ஆவது நாளில்

இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி, 'பருத்தி வீரன்' என்ற தலைப்பில் நடைபெற்றது.

கடந்த வாரம் நடந்த லக்ஸரி பட்ஜெட்டில் வெற்றியடைந்த அணியைச் சேர்ந்த தாமரை, ராஜு, வருண், அபினய், இமான், அக்‌ஷரா ஆகியோர் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றார், பிக்பாஸ்.

இதற்காக கார்டன் ஏரியாவில் கொட்டப்பட்டிருக்கும், பஞ்சை ஒரு பெட்டியில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் சேர்த்தவற்றை எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார், பிக்பாஸ்.

மேலும் கடைசியாக இருக்கும் இரண்டு நபர்களில் யார் தலைவராக வேண்டும் என்ற வாக்கெடுப்பின் மூலம் இந்த வாரம் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

தாமரை தலைவராகக் கூடாது

ஐந்து சுற்றுகள் இருந்த நிலையில், முதல் சுற்று இறுதியில், தாமரை தலைவராகக் கூடாது என்றார், பிரியங்கா. அபினய்க்கு வீட்டைச் சரியாக நடத்தும் திறமை இருப்பதால், அவரே தலைவராக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார், பிரியங்கா.

ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான தாமரை, இனிமேல் பிரியங்காவின் பேச்சை தாங்க முடியாது என கொதித்து எழுந்தார்.

'தாமரை குழப்பமாக இருக்கிறார். அதனால் அவர் இந்தவாரம் தலைவராக இருக்கக்கூடாது' என்றும் பிரியங்கா அவரைத் தொடர்ந்து தாக்கிப் பேசினார்.

இறுதியாக இந்த ஆட்டம் தொடர வேண்டும் என்றால் தாமரை, போட்டியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்தால், தாமரை வெளியேறினார்.

தலைவரான அபினய்

இந்த பஞ்சு டாஸ்க்கில் இறுதியாக ஐந்தாவது சுற்றில் அபினய், ராஜூ இடையே டாஸ்க் நடைபெற்றது.

அதில் அபினய்யின் பஞ்சு அதிக அளவிலிருந்ததால், அவர் வெற்றிபெற்று, இந்த வாரத் தலைவரானார்.

நாமினேஷன் படலம்

வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் படலம் நடைபெற்றது.

இந்தவாரம் அபினய் தலைவர் என்பதாலும், அபிஷேக் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பதாலும் இருவரையும் நாமினேட் செய்யக்கூடாது என்றார், பிக்பாஸ்.

இறுதியாக வந்த நாமினேஷன் லிஸ்டில் தாமரை, பிரியங்கா, இமான், நீருப், ஐக்கி, பாவனி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன.

வேக் அப் பாடலுக்கு யாரும் நடனமாடாமல் இருப்பதால், அனைவரும் ஜோடிகளாகப் பிரிந்து பாடல் ஒலித்தவுடன் நடனமாட வேண்டும் என்றார், பிக்பாஸ்.

அப்போது பிரியங்கா, நீருப் சென்ற போது எதிர்பாராத விதமாக நீருப் கீழே விழுந்து ரத்தம் வந்தது.

ரத்தம் வந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் மேடையில் நடனமாடி டாஸ்க்கை முடித்தார்.

இதையும் படிங்க: BB DAY 50 - அரைசதம் அடித்த பிக்பாஸ் 5.. வெளியேறிய இசைவாணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.