ETV Bharat / sitara

தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள பாரதிராஜாவுக்கு கடிதம்! - president

இயக்குநர் சங்க தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு பாரதிராஜாவுக்கு, இயக்குநர்கள் பலர் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.

Bharathiraja
author img

By

Published : Jul 5, 2019, 9:23 AM IST

இயக்குநர் விக்ரமன் தலைமையிலான குழுவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய சங்கத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அதனை தொடர்ந்து துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்டோரையும் தேர்வு செய்ய வேண்டும்.

முன்னதாக, இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக இயக்குநர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மற்ற பொருப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது தனக்கு தர்மசங்கடத்தை அளிக்கும் என்பதை அறிவேன் எனக்கூறி, ஜனநாயக முறைப்படி தேர்வு நோக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளமாறு இயக்குநர்கள் சிலர் அவரிடம் கடிதம் அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:Body:

Bharathiraja

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.