நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கியிருக்கும் திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா, பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்குரைஞரின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நேற்று (மே 29) அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டிவருகின்றனர்.
-
அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள்
— Bharathiraja (@offBharathiraja) May 28, 2020
இந்தப் படம் குறித்து இயக்குநர் பாராதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "அரியாத வயதில் காமத்தைச் சுமந்து, வெளியில் சொல்ல முடியாமல் வாழும் பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்தப் பொன்மகள்.
இது பெண்களுக்கான படம் அல்ல; பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான பாடம். இயக்குநரின் இயக்கமும், ஜோதிகாவின் உணர்ச்சி சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகளும் கண்களைக் கலங்கடித்துவிட்டன. இந்தப் பொன்மகள் வந்தாள் கண்டிப்பாகச் சமூகத்தை கலங்கடிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்