ETV Bharat / sitara

100% இருக்கைகளுக்கு அனுமதி... முதலமைச்சருக்கு நன்றி: பாரதிராஜா

சென்னை: 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குநரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

bharathi
bharathi
author img

By

Published : Jan 4, 2021, 4:17 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “ அனைவருக்கும் வணக்கம். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு முதலமைசச்ருக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் எங்கள் நன்றிகள்.

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும்போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SoP's) கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறுகொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

நன்றியுடன்,

பாரதிராஜா

தலைவர்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்” என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.