ETV Bharat / sitara

அறிவார்ந்த கதாபாத்திரம் பேட்மேன் - ராபர்ட் பேட்டின்சன் பெருமிதம்! - பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்ஸன்

டிசியின் அடுத்த பேட் மேனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்ஸன், ஏபிசி தொலைக்காட்சியில் பேட்மேன் தொடர் ஒளிபரப்பப்பட்ட காலம் முதலே, தான் பேட்மேனின் விசிறி என்றும், பேட்மேனுக்கென்று தனி மரபும், பாரம்பரியமும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Robert Pattinson
Robert Pattinson
author img

By

Published : Jan 10, 2020, 8:46 PM IST

டிசி உலகின் பிரபல சூப்பர் ஹீரோவான பேட்மேன் ஹாலிவுட்டின் சிறந்த இயக்குநர்கள், சிறந்த நடிகர்கள் பலரையும் ஈர்த்த ஒரு அறிவார்ந்த கதாபாத்திரம் என்று நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தெரிவித்துள்ளார். டிசி தனது பேட்மேன் திரைப்படத் தொடரை மீள் உருவாக்கம் செய்யவுள்ள நிலையில் இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Robert Pattinson
Robert Pattinson

காமிக்ஸ் உலகம் தொட்டே பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பேட்மேன் கதாபாத்திரம் குறித்து பேசிய பேட்டின்சன், பேட்மேனுக்கென்று தனி மரபும், பாரம்பரியமும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தன்னை என்றுமே இப்பாத்திரம் ஈர்த்துள்ளது என்றும், சினிமாவில் பணம் ஈட்டுவதற்கான ஒரு பாத்திரமாக என்றுமே பேட்மேன் பாத்திரம் தனக்கு தெரிந்ததில்லை என்றும், பேட்மேன் என்றைக்குமே ஹாலிவுட்டின் சிறந்த இயக்குநர்கள், சிறந்த நடிகர்கள் பலரையும் ஈர்த்த ஒரு அறிவார்ந்த கதாப்பாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏபிசி தொலைக்காட்சியில் ஆடம் வெஸ்ட், பேட்மேன் கதாபாத்திரம் ஏற்று நடித்த காலம்தொட்டே தான் பேட்மேனின் தீவிர விசிறி என்றும் தெரிவித்துள்ளார். டார்க் நைட் திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்படும் இந்தத் திரைப்படம், இந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சப்பாக்' சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்த பஞ்சாப் அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.