சமூக வலைதளங்களில் வைரல் என்ற வார்த்தை ஒன்று புதிதல்ல. ஒரு விஷயம், ஒருவரால் பதிவேற்றப்பட்டு இரண்டு நாள்களுக்குள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானால், அது வைரல் என்ற வார்த்தையை அடைந்துவிடும்.
அப்படி தற்போது ட்ரெண்டாகிவரும் ஒன்றுதான், 'பேட் பேலன்ஸ் சேலஞ்ச்'. இந்தச் சவாலை தற்போது, நடிகை அனுஷ்கா சர்மா தனது கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோலியுடன் இணைந்து செய்துள்ளார்.
அந்தக் காணொலியை அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் தங்களது விரல் நுனியில் பேட்டை நிறுத்திவைக்க முயற்சி செய்கின்றனர். தங்களால் முடிந்தவரை நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே இருவரும் அந்தச் சவாலை செய்து முடித்துள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஒருபக்கம் விராட் கோலியின் கிரிக்கெட், மறுபக்கம் அனுஷ்கா தனது படங்களில் நடிப்பது என இத்தம்பதி பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தாங்கள் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், காணொலிகளை வெளியிட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: டான்ஸ் ஆடத் தயாரா? - வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் லேட்டஸ்ட் பாடல்