ETV Bharat / sitara

பேச்சிலர் அனைவருக்குமான வெற்றி - ஜி.வி. பிரகாஷ் - சதீஷ் செல்வகுமார் இயக்கிய படம்

பேச்சிலர் இதில் நடித்த அனைவருக்கும் வெற்றிப் படமாக அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

gv prakash happily say thanks  பேச்சிலர் அனைவருக்குமான வெற்றி.  சதீஷ் செல்வகுமார் இயக்கிய படம்  ஜீ.வி.பிரகாஷ்குமார் நன்றி விழாவில் வாழ்த்துகள்
பேச்சிலர் அனைவருக்குமான வெற்றி
author img

By

Published : Dec 17, 2021, 6:11 PM IST

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்திருந்த படம் பேச்சிலர். கடந்த வாரம் வெளியான இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றது. தற்போதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பேச்சிலர் படத்தின் வெற்றியை அடுத்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜி.வி. பிரகாஷ்குமார், திவ்யபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இத்திரைப்படத்தின் கதாநாயகி திவ்யபாரதி பேசுகையில், இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். இப்படம் தனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் நடித்த திருப்தி அளிப்பதாகவும் அதனால் நிம்மதியாக உறக்கம் வருகிறது எனவும் கூறினார். மேலும் மக்களின் அன்பு, வரவேற்பிற்கும் நன்றி கூறினார்.
அனைவருக்குமான வெற்றி
bachelor movie success meet  chennai success meet  gv prakash happily say thanks  பேச்சிலர் அனைவருக்குமான வெற்றி.  சதீஷ் செல்வகுமார் இயக்கிய படம்  ஜீ.வி.பிரகாஷ்குமார் நன்றி விழாவில் வாழ்த்துகள்
ஜீ.வி.பிரகாஷ்குமார்
வணிகரீதியாக இப்படம் வெற்றிபெற்றுள்ளது என்று நினைக்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள் எனக் கூறினார். மேலும் பேசுகையில் இதுவரை இருபது புதுமுக இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன்.
அனைவரும் வெற்றிபெற்ற இயக்குநர்கள் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இதில் நடித்த அனைவருக்கும் இப்படம் அடையாளமாக அமைந்துள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.