தெலுங்கில் 2018ஆம் ஆண்டு பிரசாந்த் வர்மா இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியானது 'அவ்' திரைப்படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 'அவ்' திரைப்படத்தில் நித்யா மேனம், ரெஜினா கெசன்ட்ரா, ஈஷா ரெப்பா, சீனிவாச அவசரலா, பிரியதர்ஷினி புல்லிகோடா, முரளி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் தெலுங்கு திரையுலகில் பெரும் ஹிட் கொடுத்தது. 'அவ்' படம் உளவியல் சிக்கல்கள், சமூக பிரச்னையான குழந்தைகள் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள், ஓரினச்சேர்க்கை உள்ளிட்டவை குறித்து படம் அலசியிருந்தது.
இந்நிலையில் 'அவ்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக பிரசாந்த் வர்மா கூறியுள்ளார். 'அவ் 2' படத்தில் காஜல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காஜலுடன் விஜய் சேதுபதி நடிக்கும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது என்று இயக்குநர் பிரசாந்த் வர்மா கூறியுள்ளார்.