சென்னை: ஜெய் நடிக்கவுள்ள புதிய படத்தை அட்லி தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநரான அட்லி, அதன்பிறகு தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து மாஸ் ஹிட்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான ‘அந்தகாரம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். தற்போது ஷாருக்கானை வைத்து தான் இயக்கவுள்ள பாலிவுட் படத்தின் மீது கவனம் செலுத்திவரும் அட்லி, தமிழில் ஜெய் நடிக்கும் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.
அட்லியின் அனைத்து படங்களிலும் உதவி இயக்குநராக பணியாற்றிய ஈனோக் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். இது மட்டுமில்லாது மேலும் சில படங்களையும் அட்லி தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய் கடைசியாக ‘கேப்மாரி’ எனும் தனது 25ஆவது படத்தில் தோன்றியிருந்தார். அதன்பிறகு அவரது புதிய ப்ராஜெக்ட்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ட்விட்டர் ட்ரெண்ட்: 100 நாட்களில் கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்