ETV Bharat / sitara

கரோனா பீதிக்கு இடையே கிட்டார் வாசிக்கும் முயற்சியில் இறங்கிய கத்ரீனா - கிட்டார் வாசிக்கும் கத்ரீனா கைஃப்

கரோனா பீதியால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை கத்ரீனா கைஃப், கிட்டார் வாசித்து, பாடல் பாடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

Katrina Kaif tries her hand at guitar
Actress Katrina kaif
author img

By

Published : Mar 19, 2020, 9:54 PM IST

டெல்லி: ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் கத்ரீனா கைஃப் கிட்டார் வாசிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாடல், பாடி கிட்டார் வாசிக்கும் விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். அதில், ”வேலை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் இதன் பலனைக் காணலாம்” என்று பதிவிட்டு #staysafe என்ற ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்‌ஷன் திரைப்படமான சூர்யவன்ஷி படத்தில் அக்‌ஷய் குமார் ஜோடியாக நடித்துள்ள கத்ரீனா. இம்மாதம் இந்தப் படம் வெளியாகவாக இருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது. அந்தப் படத்தின் ரிலீஸை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

கரோனா தொற்று பீதியின் காரணமாக இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் பொரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில இடங்களில் நடைபெற்று வரும் திரைப்பட ஷூட்டிங்கும் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து நடிகர், நடிகைகள் என பெரும்பாலோனோர் ஷூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே கிடப்பதால் சமூக வலைதளங்கள் தான் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. கரோனா குறித்த விழப்புணர்வை பிரபலங்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கத்ரீனா சொல்லும் ஐடியாக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.