தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும், படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
#Asuran #AsuranWithVijayTV! 🔥 #VijayTelevision pic.twitter.com/G02Q0VNmxt
— Vijay Television (@vijaytelevision) October 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Asuran #AsuranWithVijayTV! 🔥 #VijayTelevision pic.twitter.com/G02Q0VNmxt
— Vijay Television (@vijaytelevision) October 17, 2019#Asuran #AsuranWithVijayTV! 🔥 #VijayTelevision pic.twitter.com/G02Q0VNmxt
— Vijay Television (@vijaytelevision) October 17, 2019
சமீபத்தில் இப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலினும் வெற்றிமாறன், தனுஷ் படக்குழுவினர் ஆகியோரை பாராட்டி இருந்தார். தற்போது இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி பெற்றிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் வாசிங்க: 'முரசொலி நிலம் பஞ்சமி நிலமல்ல' - ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!