வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் அசுரன். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
மேலும் தனுஷ் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. இந்தச் சூழலில் அசுரன் திரைப்படம் ஜப்பானில் ஒசாகா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப்பட பிரிவில் 'அசுரன்' திரைப்படம் நாமினேட் ஆகியுள்ள நிலையில், விருது விழா இம்மாதம் 27, 28ஆம் தேதிகளில் ஜப்பானின் ஒசாகா நகரத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!