ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிப்பில், குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'என்ன சொல்ல போகிறாய்?'. ஹரிஹரன் இயக்க, அவந்திகா, தேஜஸ்வினி, குக்-வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது இன்று (டிச.5) சென்னையில் நடைபெற்றது.
சிம்புவும், சிவகார்த்திகேயனும்...
அப்போது பேசிய கதாநாயகன் அஸ்வின், "இயக்குநர் ஹரிஹரனின் முதல் கதைக்கு நான் ஓகே சொல்லவில்லை. இப்போது ஓகே சொல்லி நடித்திருப்பது வேறு கதை. அவரது அலுவலகத்தில் எவ்வளவு முறை சாப்பிட்டிருப்பேன் என எனக்கே தெரியாது. பல முறை எனது பசியைப் போக்கி வயிற்றை நிரப்பியது இயக்குநரின் அலுவலகம்தான்.
மேலும் திரையுலகில் என்னைப் பொருத்த வரையிலும் சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் நடிகர் சிம்புதான். இசை வெளியீட்டுக்கு வர முடியாததற்கு கூட போன் செய்து வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் திரையுலகில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்” என்றார். திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு சிவாங்கி பாடலும் பாடியுள்ளார்.
என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரைலரும் தற்போது வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகவுள்ல படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதையும் படிங்க: 'உன்னை எல்லாம் எங்க வச்சிருந்தோம் தெரியுமா?'; புலம்பித் தவிக்கும் செல்வராகவன் ரசிகர்கள்!