‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுபவர் அசோக் செல்வன். அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் எதுவும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. தற்போது ‘ரெட்ரம்’ (REDRUM) எனும் மிரட்டலான ஹாரர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அசோக். அதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹார்னாட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சுந்தர் அண்ணாமலை தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் ‘The Shining' நாவலில் பயன்படுத்தப்பட்ட பதம் ‘REDRUM', அதாவது கொலை செய் (MURDER) என்ற வார்த்தையை பின்புறமாக உச்சரிப்பது. ‘ரெட்ரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சந்திரமுகி 2ஆம் பாகத்தில் கமிட்டான நடிகை தபு