ETV Bharat / sitara

மகனுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்! - அருண் விஜய்யின் புதியப்படங்கள்

சென்னை: நடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்

Arun Vijay
Arun Vijay
author img

By

Published : Jan 26, 2021, 4:14 PM IST

நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.

Arun Vijay
அருண் விஜய்

ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Filmsயின் ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். மேகா எடிட்டிங் செய்கிறார்.

இயக்குநர் சரவ் சண்முகம் இதுகுறித்து கூறுகையில், ”இந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன்தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாபாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்துகொண்டார்.

தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.