தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம்வருபவர் நடிகர் அருண் விஜய். நேற்று (நவம்பர் 19) இவரது 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் மாபெரும் ரத்ததான முகாமை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்தினர்.
இந்த ரத்த தான முகாமில் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர். இந்த விவகாரம் தெரிந்து அருண் விஜய் உடனே ரத்த தானம் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, ரத்த தானம் செய்தார்.
![ரசிகர்களுடன் அருண் விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/87916099-1117-42c0-9375-9a5c2980fae0_2011newsroom_1637379146_511.jpg)
இந்த ரத்த தான முகாமினை ரசிகர்களுடன் இருந்து முதன்மை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் பி. தமிழ்மணி நாராயணன், மருத்துவர் உமா, செவிலியர் அமலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
![அருண் விஜய்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/245fb0a5-b1cc-4b7b-a472-0b53e702b403_2011newsroom_1637379146_304.jpg)
ரசிகர்களின் இந்தச் செயலுக்கும் அவர்களின் அன்புக்கு நன்றியும், பாராட்டுகளையும் அருண் விஜய் தெரிவித்தார்.
இதையும் படிங்க: HBD Shalini அஜித்தின் ஆசை நாயகிக்குப் பிறந்தநாள்