ETV Bharat / sitara

குழந்தைகளுக்கான படத்தை இயக்கும் அருண் வைத்தியநாதன் - Arun Vaidyanathan movies

இயக்குநர் அருண் வைத்தியநாதன் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அருண் வைத்தியநாதன்
அருண் வைத்தியநாதன்
author img

By

Published : Aug 3, 2021, 1:26 PM IST

'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் வைத்தியநாதன். இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கிய இவர் கடைசியாக அர்ஜுனை வைத்து 'நிபுணன்' படத்தை இயக்கினார்.

இதனையடுத்து அவர் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது.

அவ்வாறாக இல்லாமல் குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காகக் குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சியில் இப்படம் உருவாகிறது. குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும், இது அனைத்து வயதினரையும் கவரும். கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

ஒடிடி தளங்களில்கூட குழந்தைகளை கவரும் வகையில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் கதையை நான் கரோனாவுக்கு முன்பாகவே எழுதிவிட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன். இதனை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட முடிவு செய்துள்ளோம்.

நான்கு குழந்தைகள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். என் சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கிறேன்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு ராம் பொத்தினேனி வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.