ETV Bharat / sitara

17 ஆண்டு கனவு: 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை உருவாக்கிய அர்ஜுன் - anjaneyar temple in chennai

ஆக்ஷன் ஹீரோ அர்ஜுன் 180 டன் எடையில் உருவாக்கியுள்ள ஆஞ்சநேயர் சிலை கோயிலின் குடமுழுக்கு விழா இன்று (ஜூன் 2) நடைபெற்றது.

அர்ஜுன்
அர்ஜுன்
author img

By

Published : Jul 2, 2021, 7:34 PM IST

நடிகர் அர்ஜுன் தீவிர ஆஞ்சநேயர் பக்தர் என்பது அனைவரும் அறிந்தே ஒன்றே. ஆஞ்சநேயர் மீது தீவிர பக்தியுள்ள இவர், சென்னை போரூரில் உள்ள கெருகம்பாக்கத்தில் கோயில் கட்டியுள்ளார். ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள, இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.

180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை
180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை

இது குறித்து அர்ஜுன் கூறுகையில், ''இந்தக் கோயில் என்னுடைய 17 ஆண்டு கனவு. இதற்கு ஏன் 17 ஆண்டுகள் ஆனது என்பதைவிட அந்த நாள்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், மனைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றது என்பதுதான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

குடமுழுக்கு விழாவில் அர்ஜுன்
குடமுழுக்கு விழாவில் அர்ஜுன்

பலரின் ஆதரவும் என்னை இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்தக் கோயிலை நான் கட்டினேன் என்பதைவிட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்தச் செயலைச் செய்ய தூண்டியது என்பதுதான் உண்மை. ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது.

அர்ஜுன் குடும்பம்
அர்ஜுன் குடும்பம்

இதுதான் முதல் 180 டன் எடையுடைய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலுக்கு வந்து, சாமி தரிசனம்செய்தார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. விரைவில் இந்தக் கோயில் பொதுமக்களுக்காகத் திறக்கப்படவுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.