ETV Bharat / sitara

'கஜினிகாந்த்' பட இயக்குநருடன் அரவிந்த் சாமி! - இருட்டு அறையில் முரட்டு குத்து

அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

அரவிந்த் சாமி
author img

By

Published : May 3, 2019, 8:54 AM IST

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தமிழில் 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய திரைப்படங்களை இயக்கி இளைஞர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கினவர்.

இந்நிலையில் சந்தோஷ் ஜெயக்குமார், நடிகர் அரவிந்த் சாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு பூஜை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி துப்பறியும் அலுவலராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வி.மதியழகன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

அரவிந்த் சாமி செக்கச் சிவந்தவானம் படத்தை அடுத்து நடித்திருக்கும் கள்ளபார்ட், வணங்காமுடி, சதுரங்கவேட்டை 2, நரகாசூரன் ஆகிய படங்கள் திரைக்கு விரைவில் வர உள்ளன.

Intro:Body:

aravind saamy new film 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.