ETV Bharat / sitara

’வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பம் உண்டாக்க வேண்டாம்’ - ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் - AR Rahman about corona virus

கரோனா பாதிப்பை மதத்தோடு ஒப்பிட்டு குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
author img

By

Published : Apr 2, 2020, 5:35 PM IST

இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டெல்லியில் நடந்த இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கரோனா உறுதியாகியுள்ள 234 நபர்களில் 190 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள்.

இந்நிலையில் மத வழிபாட்டு கூடங்களில், கூடி குழப்பத்தை ஏற்படுத்தம் நேரம் இது அல்ல என்றும், ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்தியா முழுக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி. இவ்வளவு பயங்கரமான நோயை சமாளிக்க அவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உயிரை பணயம் வைத்து நம் உயிரை காப்பாற்றுகிறார்கள்.

கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராட நம்மிடம் இருக்கும் வேற்றுமையை மறந்து ஒன்று சேர வேண்டிய நேரம் இது. வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு, முதியவர்களுக்கு, ஏழைகளுக்கு, புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் இது. கடவுள் நம் இதயத்தில் தான் இருக்கிறார், வழிபாட்டு இடங்களில் கூட்டமாகக் கூடி குழப்பம் உண்டாக்க இது நேரமல்ல. அரசு சொல்வதைக் கேளுங்கள். இன்னும் சில வாரங்கள் தனிமை படுத்திக்கொண்டால் இன்னும் பல வருடங்கள் நமக்கு கிடைக்கும். வைரசை பரப்பி உங்களுடன் இருப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள்.

உங்களுக்குள் வைரஸ் இருக்கிறது என உங்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். பல லட்சம் மக்களின் உயிர், நம் கையில் தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பிற்கு நானே சான்று; கரோனாவில் இருந்து மீண்டு வரும் நாட்டுப்புற பாடகி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.