அனுஷ்கா தமிழில் ’ரெண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சிங்கம், அருந்ததி, தாண்டவம், என்னை அறிந்தால், தெய்வத் திருமகள், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடை கூடி நடித்தார் அனுஷ்கா. எடை கூட்டிய நிலையிலேயே பாகுபலி 2 படத்திலும் நடித்திருந்தார். இறுதிக்கட்ட பணிகளின் போது அனுஷ்காவின் உடலை கிராஃபிக்ஸ் மூலம் மெலிய வைத்து பாகுபலி 2 படம் வெளியானது.
அதை தொடர்ந்து வெளியான பாகமதி உள்ளிட்ட படங்களிலும் அனுஷ்கா அதே தோற்றத்தில் தான் இருந்தார். அதே வேளையில் அவர் சில வருடங்களாக உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
The beautiful #anushkashetty and the fab @LukeCoutinho17 coming up with some exciting stuff soon. #sunderphotography #fitness #holisticliving. pic.twitter.com/jW24LL7dhc
— sunder ramu (@sunderramu) February 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The beautiful #anushkashetty and the fab @LukeCoutinho17 coming up with some exciting stuff soon. #sunderphotography #fitness #holisticliving. pic.twitter.com/jW24LL7dhc
— sunder ramu (@sunderramu) February 11, 2019The beautiful #anushkashetty and the fab @LukeCoutinho17 coming up with some exciting stuff soon. #sunderphotography #fitness #holisticliving. pic.twitter.com/jW24LL7dhc
— sunder ramu (@sunderramu) February 11, 2019
`சாஹோ’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த அவர் அதிகபடியான சண்டை காட்சிகள் இருந்ததால் அந்தப் படத்திலிருந்து அவரே விலகினார் என தகவல் வெளியாகின.
இந்நிலையில் உடல் எடையை குறைக்க அவர் ஆஸ்டிரியாவில் உள்ள ஸ்பா கிளினிக் ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனிடையே, அனுஷ்கா உடல் எடை மெலிந்து மீண்டும் பழைய இளமைக்கு திரும்பிய புகைப்படம் சமூகவலைதளங்களில் கலக்கி வருகிறது. இதனால் அனுஷ்காவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த புகைப்படத்தில் அவருடன் ஒரு ஆண் ஒருவர் இருந்தார். அவர் பெயர் லூக் கவுடின்ஹோ இவர் ஒரு நியூட்டிரிசனிஸ்ட். திரும்ப பழைய அனுஷ்காவாக மாற இவரின் முயற்சியும் ஒன்று.
இப்புகைப்படங்களை கிளிக் செய்தது நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு. லூக் கவுடின்ஹோ தனது உணவியல் மற்றும் லைஃப்ஸ்டைல் சம்பந்தமாக வெளிவரும் புதிய புத்தக அட்டை படத்திற்கு போட்டோஷூட் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மாதவனுடன் இணைந்து 'சைலன்ட்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா.