ETV Bharat / sitara

'பாகுபலி தேவசேனா'க்கு 'சைரா நரசிம்ம ரெட்டி' படையில் இந்த கதாபத்திரமா...? - சிரஞ்சீவி

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகை அனுஷ்காவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Anushka
author img

By

Published : Aug 24, 2019, 8:29 PM IST

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் உய்யாலாவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, ’சைரா நரசிம்மா ரெட்டி’ எனும் பெயரில் படமாகிவருகிறது. நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இப்படத்தை நடிகர் ராம் சரண் தயாரித்து வருகிறார். இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவும் டீசரும் வெளியாகி ரசிகர்களுடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மும்பையில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சீரஞ்சிவி நடிகை அனுஷ்காவின் கதாபாத்திரத்தை பற்றி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் அனுஷ்கா இந்திய சுதந்திர போரட்டத்தின் முதல் பெண் வீராங்கனையான ஜான்சி ராணி லட்சுமிபாய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். அனுஷ்காவின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிவடையாதால் டீசரில் அவரின் கதாபாத்திரம் தோன்றவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வரலாற்று படத்தில் அனுஷ்காவின் நடிப்பு சிறப்பாக இருக்கும். படத்தில் கெளரவ வேடத்தில் அனுஷ்கா தோன்றினாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

Intro:Body:

Anushka cameo role in Sye raa narasimma reddy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.