இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகப் பதிவாகிறது. இதனிடையே அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும் தடுப்பூசி குறித்து தவறான வதந்தி பரவுவதால் மக்கள் அதனைத் தவிர்க்கின்றனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எனப் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
![கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12295979_anupamaa.jpg)
அந்த வகையில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். தான் தடுப்பூசி செலுத்தியபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'?